TNPSC Thervupettagam

உலகளாவிய நைட்ரஜனின் புதிய மூலம்

April 14 , 2018 2288 days 690 0
  • அண்மையில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வின்படி, பூமியில் உள்ள கால் பங்கு நைட்ரஜனானது புவியினுடைய பாறைப் படுகைகளின் (bedrock) வானிலைக் காரணமான பாறைச் சிதைவுறுச் (weathering)   செயல்பாடுகளினால்  உருவாகின்றன.
  • நீண்ட நாட்களாகவே, நடப்பளவிலான அறிவியலானது (prevailing science) தாவரங்களுக்கு கிடைக்கக்கூடிய பூமியில் உள்ள அனைத்து நைட்ரஜன்களும் வளிமண்டலத்திலிருந்தே கிடைக்கின்றன என உணர்த்தி வந்தது.
  • தற்போது இந்த ஆய்வானது, இயற்கைச் சூழலமைவில் (Natural ecosystems) உள்ள நைட்ராஜனில் 26 சதவீதமானது பாறைகளிலிருந்து கிடைக்கின்றது எனவும், மீதி அளவானது வளி மண்டலத்திலிருந்து கிடைக்கிறது எனவும் கண்டறிந்து உள்ளது.
  • பாறைகளிலிருந்து பெறக்கூடிய நைட்ரஜனானது (Rock-derived nitrogen) வனங்களின் வளர்ச்சி மற்றும் புல்வெளிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். மேலும்  அவற்றை முன்பு எண்ணியதைக் காட்டிலும்  அதிக அளவில் கார்பன்-டை-ஆக்ஸைடை  உட்கிரக்க அனுமதிக்கும்.
  • இந்த ஆய்வானது நைட்ரஜன் பாறைச் சிதைவுறல் (Nitrogen weathering) செயல் முறையானது உலக அளவில் மண்ணிற்கும் இயற்கைச் சூழலமைவிற்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, ஊட்டச்சத்துகளுக்கான மூல ஆதாரம் (source of nutrition) என்பதை வெளிக்காட்டுகின்றது.
  • இந்த கண்டுபிடிப்பானது பருவநிலை மாற்றக் கணிப்புகளை (Climate Change Projections) பெருமளவில் அதிகரிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்