2020 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பாலின இடைவெளிக் குறியீட்டில் மொத்தமுள்ள 153 நாடுகளில் இந்தியா 112வது இடத்தில் உள்ளது.
இந்தக் குறியீடானது உலகப் பொருளாதார மன்றத்தினால் (WEF - World Economic Forum) வெளியிடப் பட்டுள்ளது.
முதலாவது பாலின இடைவெளிக் குறியீடானது 2006 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
இந்தக் குறியீட்டில் அதிகபட்ச மதிப்பெண் 1 (சமத்துவம்) மற்றும் மிகக் குறைந்த மதிப்பெண் 0 (சமத்துவமின்மை) ஆகும்.
முக்கிய அம்சங்கள்
ஐஸ்லாந்து (கிட்டத்தட்ட 88% அளவிற்கு நெருக்கமாக) தொடர்ந்து 11 ஆண்டுகளாக உலகளாவிய பாலின இடைவெளிக் குறியீட்டில் முதலிடத்தில் உள்ளது.
இந்தக் குறியீட்டில் ஏமன் கடைசி இடத்தில் (153 வது) உள்ளது.
அரசியல் அதிகாரமளிப்பதில் மிகப்பெரிய பாலின ஏற்றத்தாழ்வு உள்ளது.
இந்தக் குறியீட்டின் கடந்த பதிப்பில் இந்தியா 108வது இடத்திலிருந்து 112வது இடத்திற்கு சறுக்கி உள்ளது.
ஆய்வு செய்யப்பட்ட 153 நாடுகளில், அரசியல் பாலின இடைவெளியை (0.411) விட பொருளாதாரப் பாலின இடைவெளி (0.354) அதிகமாக இருக்கும் ஒரே நாடு இந்தியா மட்டுமேயாகும்.
நான்கு குறிகாட்டிகளில் இந்தியாவின் செயல்திறன்:
பொருளாதாரப் பங்கேற்பு மற்றும் வாய்ப்புகள் - 149வது இடம்