TNPSC Thervupettagam

உலகளாவிய பாலின எதிர்வினைக் கண்காணிப்பகம்

October 2 , 2020 1425 days 690 0
  • கோவிட் – 19 உலகளாவிய பாலின எதிர்வினைக் கண்காணிப்பகமானது ஐக்கிய நாடுகள் பெண்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றினால் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
  • இது நாடுகளின் பாலின அடிப்டையிலான வன்முறை, செலவற்றச் சுகாதார நலத்தைச் ஆதரித்தல் மற்றும் பெண்களின் பொருளாதாரப் பாதுகாப்பு ஆகிய 3 பிரிவுகளின் கீழ் ஆய்வு நடத்தியுள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, 8 நாடுகளில் 1 நாடு மட்டுமே கோவிட் – 19 நோய்த் தொற்றுத் தாக்கத்திலிருந்து பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
  • 135 நாடுகளில் 71% அளவு பாலின அடிப்படையிலான வன்முறையைக் கையாள்வது குறித்து கவனம் செலுத்துகின்றன.
  • பாலின அடிப்படையிலான வன்முறையைக் களைவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளில் ஐரோப்பா முன்னணியில் உள்ளது. இங்கு 32% அனைத்து வன்முறைத் தடுப்பு நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளன.
  • வட அமெரிக்கக் கண்டமானது பெண்களின் பொருளாதாரப் பாதுகாப்பை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட அதிக எண்ணிக்கையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்கு அடுத்து ஆப்பிரிக்கா இது குறித்து அதிக அளவிலான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
  • ஐரோப்பாவானது செலவற்ற சுகாதார நலத்தைச் செயல்படுத்துவதில் முன்னணியில் உள்ளது. இது இந்தக் கண்காணிப்பு அறிக்கையில் 49% அனைத்து செலவற்ற சுகாதார நலங்களைக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்