TNPSC Thervupettagam

உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளில் இந்தியாவின் பங்கேற்பு

April 21 , 2025 2 days 42 0
  • நிதி ஆயோக் அமைப்பானது, ‘வாகனங்களுக்கான தொழில்துறை: உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளில் இந்தியாவின் பங்கேற்பை மிகவும் மேம்படுத்துதல்’ என்ற தலைப்பிலான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையானது, வாகனத் துறையில் இந்தியாவின் உலகளாவிய மதிப்புச் சங்கிலி (GVC) திறனைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது மற்றும் உலகளாவியப் பெரும் தலைமைத்துவத்திற்கான உத்தி சார் வழிமுறைகளை எடுத்துக்காட்டுகிறது.
  • இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வாகன உற்பத்தித் துறையின் பங்கு 7.1% ஆகவும் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தி துறையின் பங்கு 49% ஆகவும் உள்ளது.
  • உலகளவில் வர்த்தகம் செய்யப்படும் வாகனங்கள் உதிரி பாகங்களில் இந்தியாவின் தற்போதையப் பங்கு தோராயமாக 3% அல்லது 20 பில்லியன் ஆகும்.
  • 2023 ஆம் ஆண்டில் சீனா சுமார் 8 மில்லியனுக்கும் அதிகமான மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதுடன் உற்பத்தித் துறைகளில் தற்போது மின்சார வாகனங்கள் முன்னுரிமைகளைப் பெற்று வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்