TNPSC Thervupettagam

உலகளாவிய மீத்தேன் கண்காணிப்பு அறிக்கை 2024

March 17 , 2024 252 days 247 0
  • 2023 ஆம் ஆண்டில் எரிபொருள் பயன்பாட்டிலிருந்து வெளியான மீத்தேன் உமிழ்வு 120 மில்லியன் டன்கள் என்ற மிக உயர்ந்த அளவில் இருந்தது.
  • வளிமண்டலத்தில் வெளியிடப்பட்ட 120 மெட்ரிக் டன் மீத்தேன்களில், 80 மெட்ரிக் டன்கள் ஆனது, அதிகளவில் மீத்தேன் உமிழ்வு பதிவான முதல் 10 நாடுகளில் இருந்து வெளியாகின.
  • எண்ணெய் மற்றும் எரிவாயு சார்ந்த நடவடிக்கைகளில் இருந்து அதிக அளவில் மீத்தேன் வெளியேற்றும் நாடாக அமெரிக்கா முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து ரஷ்யாவும் உள்ளது.
  • மீத்தேன் உமிழ்வு ஆனது, 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் சுமார் 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
  • உலகெங்கிலும் உள்ள முக்கியப் புதைபடிவ எரிபொருள் கசிவுகளால் 5 மெட்ரிக் டன்னுக்கு அதிகமான மீத்தேன் உமிழ்வுகள் பதிவானதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
  • பெரும்பாலும் உயிரி எரிபொருள் பயன்பாட்டிலிருந்துப் பெறப்படும் பல்வேறு உயிர் ஆற்றல்களால் 10 மெட்ரிக் டன் மீத்தேன் உமிழ்வு பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்