முந்தைய மதிப்பீடுகளுடன் ஒப்பிடும் போது பெரும்பாலான மீன் வளங்களின் மீது அதிகம் மீன்பிடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன அல்லது அவற்றின் வளங்கள் ஏற்கனவே மிகவும் குறைந்து விட்டன என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
இந்த அதிகப்படியான மீன்பிடித்தல் நடவடிக்கையானது மீன்களின் எண்ணிக்கையை இயற்கையாகவே மீளுருவாக்கும் செய்யும் மீன் வளங்களின் திறனை விஞ்சியுள்ளது.
மீன்பிடி நடவடிக்கையானது அங்கு இயற்கையாக காணப்படும் எண்ணிக்கையில் 10 சதவீதத்திற்குக் கீழே குறையும் போது மீன் வளங்களின் அளவு சரிந்ததாகக் கருதப் படுகிறது.
உணவு மற்றும் வேளாண் அமைப்பானது (FAO), "அதிகபட்சமாக நிலையான முறையில் மீன்பிடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டவை" என வகைப்படுத்தப்பட்ட மீன் வளங்களுள் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு வளங்களில் உண்மையில் அதிகமாக மீன் பிடிக்கப்படுகிறது.
அதிக அளவில் மீன்பிடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பகுதிகள் என்ற பிரிவில் முன்னர் மதிப்பிடப் பட்டதை விட மேலும் 85 சதவீத வளங்கள் ஆனது (இயற்கையாக காணப் படும் எண்ணிக்கையில் 10 சதவீதத்திற்குக் கீழே) குறைந்திருக்கலாம்.