TNPSC Thervupettagam

உலகளாவிய ரேடியோ கண்காணிப்பு அமைப்பு

November 24 , 2020 1467 days 611 0
  • இந்தியப் பிராந்தியக் கண்காணிப்பு அமைப்பானது (Indian Regional Navigation Satellite System- IRNSS) இந்தியக் கடல் பகுதியில் சர்வதேசக் கடல்சார் அமைப்பின் (International Maritime Organisation - IMO) செயல்பாடுகளுக்காக IMO அமைப்பினால் மேற்கொள்ளப் படும் உலகளாவிய ரேடியோ கண்காணிப்பு அமைப்பின் ஒரு கூறாக ஏற்றுக் கொள்ளப் பட்டு உள்ளது.
  • இது குளோனாஸ் மற்றும் ஜிபிஎஸ் போன்று இடம் குறித்த தகவல்களைப் பெறுவதற்கு வேண்டி IRNSS அமைப்பைப் பயன்படுத்திட கப்பல்களை அனுமதிக்கின்றது.
  • இந்தக் கண்காணிப்பு அமைப்பானது இந்தியக் கடல் பகுதியில் 1500 கிலோ மீட்டர் வரை தனது பணியை மேற்கொள்கின்றது. இது இங்கு ஜிபிஎஸ் என்பதற்கு மாற்றாக விளங்குகின்றது.
  • IRNSS அமைப்பின் செயல்பாட்டுப் பெயர் நேவிக் (NAVIC) என்பதாகும்.
  • இது தனது சுற்று வட்டப் பாதையில் 8 தொகுப்புகளை (வலையமைப்புகளை) கொண்டுள்ளது.
  • எனினும் IRNSS ஒரு உலகளாவிய கண்காணிப்பு அமைப்பு இல்லை, மாறாக இது ஒரு பிராந்தியக் கண்காணிப்பு அமைப்பு ஆகும்.
  • அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியவற்றிற்குப் பிறகு உலகில் ஒரு தனிச்சுதந்திர மற்றும் பிராந்திய செயற்கைக் கோள் கண்காணிப்பு அமைப்பைக் கொண்ட 4வது நாடு இந்தியா ஆகும்.
  • IMO என்பது ஐக்கிய நாடுகளின் ஒரு அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்