உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மூலம் வெளியிடப்பட்ட இந்த அறிக்கைக்கு ‘உலக வன அறிக்கை 2024’ எனப் பெயரிடப் பட்டுள்ளது.
அதிகபட்சமாக 19,37,000 ஹெக்டேர் காடுகளின் பரப்பளவைக் கொண்டு சீனாவானது இதில் உலகளவில் முன்னணியில் உள்ளது.
அதைத் தொடர்ந்து 4,46,000 ஹெக்டேர் பரப்பளவுடன் ஆஸ்திரேலியாவும், அதனை அடுத்து இந்தியாவும் இதில் இடம் பெற்றுள்ளன.
இந்தியா, 2010 முதல் 2020 வரை ஆண்டுதோறும் 2,66,000 ஹெக்டேர் காடுகளின் பரப்பு உயர்வினைப் பெற்றுள்ளது.
இந்த காலக் கட்டத்தில் மிக அதிக வனப் பரப்பளவைக் கொண்ட முதல் 10 நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
சிலி, வியட்நாம், துருக்கி, அமெரிக்கா, பிரான்சு, இத்தாலி மற்றும் ருமேனியா ஆகியவை முதல் 10 இடங்களில் உள்ள மற்ற நாடுகளில் அடங்கும்.
2000 முதல் 2010 வரையில் மற்றும் 2010 முதல் 2020 வரையிலான காலக் கட்டங்களில் மொத்த உலகளாவியச் சதுப்புநில இழப்பு விகிதம் 23% குறைந்துள்ளதாகவும் இந்த அறிக்கை கூறியுள்ளது.