TNPSC Thervupettagam

உலகளாவிய வருடாந்திரம் முதல் பத்தாண்டு கால பருவநிலை தகவல் அறிக்கை

May 16 , 2022 798 days 383 0
  • உலகளாவிய வருடாந்திரம் முதல் பத்தாண்டு கால பருவநிலை தகவல் அறிக்கை என்பது சமீபத்தில் உலக வானிலை அமைப்பினால் வெளியிடப்பட்டது.
  • அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகம் 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பமயமாதல் என்ற ஒரு வரம்பினைத் தற்காலிகமாக மீறுவதற்கு 50 சதவீத வாய்ப்பு உள்ளது.
  • 2022 மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் குறைந்தபட்சமாக ஒரு ஆண்டாவது 2016 ஆம் ஆண்டிற்குப் பதிலாக மிகவும் வெப்பமான ஆண்டாக மாற 93 சதவீத வாய்ப்பு உள்ளது.
  • தற்காலிகமாக 1.5 டிகிரி செல்சியஸ் என்ற வெப்பநிலையைத் தாண்டுவதற்கான ஒரு வாய்ப்பு 2015 ஆம் ஆண்டில் அது பூஜ்ஜியத்தை நெருங்கியதில் இருந்து படிப்படியாக உயர்ந்து உள்ளது.
  • உலக அளவில் 2022 ஆம் ஆண்டு மற்றும் அடுத்த நான்கு ஆண்டுகளில் இயல்பை விட குறைவான வெப்பநிலை பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ள நாடுகளில் சில பகுதிகளில் இந்தியாவும் இடம் பெறலாம்.
  • இது கடந்தப் பத்தாண்டுகளில் நிலவிய மழைப் பொழிவுகளின் ஒரு சாத்தியமான அதிகரிப்பு காரணமாகவும் இருக்கலாம்.
  • இந்தியாவின் பல பகுதிகளில் இயல்பை விட அதிகமாக மழை பெய்யும்.
  • இது வெப்ப நிலையை குறைவாக வைத்திருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்