உலகளாவிய வர்த்தகக் கண்ணோட்டம் மற்றும் புள்ளிவிவரங்கள்
April 13 , 2023 592 days 256 0
புதிய "உலகளாவிய வர்த்தகக் கண்ணோட்டம் மற்றும் புள்ளி விவரங்கள்" அறிக்கை என்பது 2023 ஆம் ஆண்டிற்கான சந்தை மாற்று விகிதங்களில் உண்மையான உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி மேம்பாட்டினை 2.4% ஆக மதிப்பிடுகிறது.
இது உலக வர்த்தக நிறுவனத்தினால் வெளியிடப் பட்டது.
2022 ஆம் ஆண்டில் உலக வணிகப் பொருட்களின் மதிப்பு 12% உயர்ந்து 25.3 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
உலக வர்த்தகச் சேவை வர்த்தகத்தின் மதிப்பு 2022 ஆம் ஆண்டில் 15% அதிகரித்து 6.8 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
வர்த்தகம் மற்றும் உற்பத்தி மேம்பாடு ஆகிய இரண்டின் மதிப்பீடுகளும் கடந்த 12 ஆண்டுகளில் முறையே 2.6% மற்றும் 2.7% என்ற அளவில் சராசரியை விடக் குறைவாக உள்ளன.
பொருட்களின் ஏற்றுமதியில் இந்தியா 18வது இடத்தினைப் பெற்றுள்ள நிலையில், இந்தியா உலக நாடுகளின் வணிகப் பொருட்களின் உலகளவிலான வர்த்தகத்தில் 9வது இறக்குமதியாளராகவும் உள்ளது.
வர்த்தகம் சார்ந்த சேவை ஏற்றுமதியைப் பொறுத்த வரையில், இந்தியா 313 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் அல்லது உலகளவில் 4.4 சதவீதத்துடன் 7வது இடத்தைப் பெற்றது.
இந்திய இறக்குமதிகளின் மதிப்பானது, 263 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது உலகளவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகை வணிகச் சேவைகளில் 4 சதவீதத்தினைக் கொண்டுள்ளது.