உலகளாவிய வலை தளம் (www) உருவாக்கப்பட்டதை நினைவு கூருவதற்காகவும், உலகில் அதன் தாக்கத்தை அங்கீகரிப்பதற்காகவும் இந்தத் தினமானது அனுசரிக்கப் படுகிறது.
1991 ஆம் ஆண்டு இந்த நாளில், டிம் பெர்னர்ஸ்-லீ உலகளாவிய வலை தளத்தினை அறிமுகம் செய்யும் ஒரு திட்டத்தை ஆல்ட். ஹைபர்டெக்ஸ்ட் (தகவல் இணைப்பு உள்ளீடுகளைக் கொண்ட) செய்திக் குழுவில் வெளியிட்டார்.
1989 ஆம் ஆண்டு சர் டிம் பெர்னர்ஸ்-லீ என்பவரால் இந்தத் தளம் உருவாக்கப் பட்டது.
CERN அமைப்பில் உள்ள ஆராய்ச்சியாளர்களிடையேத் தகவல்களைப் பகிர்வதற்கும் தகவல் மேம்பாட்டினை மேற்கொள்வதற்கு ஏதுவாகவும் அமைந்த “பரவலாக்கப்பட்ட தகவல் அமைப்பிற்கான” முன்மொழிதலை அவர் சமர்ப்பித்தார்.
முதல் இணையச் சேவையகம், “http,” மற்றும் முதல் இணைய உலாவி, “WorldWideWeb” (பின்னர் Nexus என மறுபெயரிடப் பட்டது) ஆகியவை 1990 ஆம் ஆண்டில் பெர்னர்ஸ்-லீ மற்றும் அவரது சகாவான ராபர்ட் கைலியாவ் ஆகியோரால் உருவாக்கப் பட்டது.