பொருளாதார மற்றும் சமூக உள்ளடக்கம் ஆகியவற்றின் அடிப்படையில், உலகில் உள்ள 113 நகரங்களில் இந்தியாவில் உள்ள பெங்களூரு நகரமானது நாட்டின் மிகவும் முன்னணியில் உள்ள ஒரு தரவரிசைப் படுத்தப்பட்ட நகரமாக (அந்நகரின் தரவரிசை 83) உருவெடுத்துள்ளது.
வளமை மற்றும் உள்ளடக்கல் நகர முத்திரை மற்றும் விருதுகள் (Prosperity & Inclusion City Seal and Awards - PICSA) குறியீடானது முதன்முறையாக பாஸ்க் நிறுவனங்கள் மற்றும் டி & எல் பங்காளர்கள் ஆகியவற்றால் ஏற்படுத்தப்பட்டது.
நகரங்களில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் விரிவான மற்றும் வளமான சூழல்களை உருவாக்குவதற்கான தங்களது முயற்சிகளுக்காக உலகில் உள்ள முக்கியமான நகரங்கள் முதன்முறையாக இதில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
இந்தப் பட்டியலில் ஜூரிச் (சுவிட்சர்லாந்து) முதலிடத்திலும் வியன்னா (ஆஸ்திரியா) இரண்டாவது இடத்திலும் கோபன்ஹேகன் (டென்மார்க்) மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இந்தப் பட்டியலில் தில்லி 101வது இடத்திலும் மும்பை 107 இடத்திலும் உள்ள மற்ற இந்திய நகரங்களாகும்.