போர்ப்ஸ் நிறுவனமானது, விற்பனை, லாபம், சொத்துக்கள் மற்றும் சந்தை மதிப்பு ஆகிய நான்கு அளவுருக்களைப் பயன்படுத்தி உலகின் மிகப்பெரிய 2000 பொது நிறுவனங்களை தரவரிசைப் படுத்துகிறது: .
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனமானது, இந்தப் பட்டியலில் இரண்டு இடங்கள் முன்னேறி 53வது இடத்தைப் பிடித்தது.
அதைத் தொடர்ந்து பாரத் ஸ்டேட் வங்கி 105வது இடத்திலும், HDFC வங்கி 153வது இடத்திலும், ஐசிஐசிஐ வங்கி 204வது இடத்திலும் உள்ளன.
பெர்க்சயர் ஹாத்வே நிறுவனம் முதல் முறையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது.
சீனாவின் தொழில்துறை மற்றும் வணிக வங்கியானது, தொடர்ந்து ஒன்பது வருடங்கள் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த பிறகு தற்போது 2வது இடத்திற்கு தள்ளப் பட்டது.
சவுதி அரேபிய நாட்டைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனம் (சவுதி அராம்கோ) 3வது இடத்தைப் பிடித்தது.