உலகின் அதிகம் பேசப்படும் மூன்றாவது மொழி - இந்தி
February 20 , 2020
1740 days
828
- உலகெங்கிலும் 615 மில்லியன் மக்களால் பேசப்படும் இந்தி மொழியானது உலகிலேயே அதிகம் பேசப்படும் மூன்றாவது மொழியாகும்.
- 1,132 மில்லியன் மக்களால் பேசப்படும் ஆங்கிலம் முதலிடத்தில் உள்ளது. 1,117 மில்லியன் மக்களால் பேசப்படும் மாண்டரின் மொழி இரண்டாவது இடத்தில் உள்ளது.
- உலகில் பயன்பாட்டில் உள்ள மொழிகள் குறித்த வருடாந்திர தரவு தளத்தை எத்தனோலோக் (இனப் பண்பாட்டியல்) நிறுவனமானது வெளியிட்டுள்ளது.
- இந்தத் தரவு தளமானது 7,111க்கும் மேற்பட்ட மொழிகளை உள்ளடக்கியுள்ளது.
- பயன்பாட்டில் இல்லாத மொழிகளையும் 348 பயன்பாட்டில் உள்ள மொழிகளையும் உள்ளடக்கிய தரவுகளை இது சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
Post Views:
828