TNPSC Thervupettagam

உலகின் அதிகம் பேசப்படும் மூன்றாவது மொழி - இந்தி

February 20 , 2020 1740 days 827 0
  • உலகெங்கிலும் 615 மில்லியன் மக்களால் பேசப்படும் இந்தி மொழியானது உலகிலேயே அதிகம் பேசப்படும் மூன்றாவது மொழியாகும்.
  • 1,132 மில்லியன் மக்களால் பேசப்படும் ஆங்கிலம் முதலிடத்தில் உள்ளது. 1,117 மில்லியன் மக்களால் பேசப்படும் மாண்டரின் மொழி இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • உலகில் பயன்பாட்டில் உள்ள மொழிகள் குறித்த வருடாந்திர தரவு தளத்தை எத்தனோலோக் (இனப் பண்பாட்டியல்) நிறுவனமானது வெளியிட்டுள்ளது.
  • இந்தத் தரவு தளமானது 7,111க்கும் மேற்பட்ட மொழிகளை உள்ளடக்கியுள்ளது.
  • பயன்பாட்டில் இல்லாத மொழிகளையும் 348 பயன்பாட்டில் உள்ள மொழிகளையும் உள்ளடக்கிய தரவுகளை இது சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்