TNPSC Thervupettagam

உலகின் அதிகாரம் மிக்க 100 பெண்கள் பட்டியல்

December 11 , 2022 585 days 334 0
  • ஃபோர்ப்ஸ் இதழின் 2022 ஆம் ஆண்டு உலகின் அதிகாரம் மிக்க 100 பெண்களின் பட்டியலில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேன் முதலிடம் பெற்றுள்ளார்.
  • 2010 ஆம் ஆண்டைத் தவிர, 2006 முதல் 2020 ஆம் ஆண்டு வரை ஜெர்மனியின் முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் இப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.
  • அப்போதைய அமெரிக்க அதிபரின் மனைவியான மிச்செல் ஒபாமா 2010 ஆம் ஆண்டில் முதல் இடத்தினைப் பெற்றார்.
  • இப்பட்டியலில் ஈரானின் மஹ்சா அமினி 100வது இடத்தைப் பிடித்துள்ளார்.
  • இப்பட்டியலில் முதன்முறையாக மரணத்திற்குப் பின் சேர்க்கப்பட்ட நபர் இவரே ஆவார்.
  • 2022 ஆம் ஆண்டிற்கான இப்பட்டியலில் ஆறு இந்தியப் பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.
  • அந்தப் பட்டியலில் இடம் பெற்ற இந்தியப் பெண்மணிகள்
    • மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,
    • பயோகான் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் கிரண் மஜும்தார்-ஷா,
    • நைக்கா நிறுவனர் ஃபால்குனி நாயர்,
    • HCL டெக் நிறுவனத்தின் தலைவர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா,
    • SEBI தலைவர் மாதபி பூரி புச் மற்றும்
    • இந்திய எஃகு ஆணையத்தின் தலைவர் சோமா மோண்டல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்