தற்போதுள்ள உயிரியல் (கரண்ட் பயாலஜி) என்ற இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, ஆண் வெள்ளை பெல்பர்ட் பறவையானது உலகில் இதுவரை பதிவு செய்யப்பட்ட பறவைகளில் அதிக சத்தமிடும் பறவைகள் என்று கண்டறியப் பட்டுள்ளது.
ஆண் வெள்ளை பெல்பர்டின் இனச்சேர்க்கை அழைப்பானது ஸ்க்ரீமிங் ஃப்யாஸ் (screaming phias) என்ற பறவை கத்துவதை விட மூன்று மடங்கு சத்தமாக இருக்கும் (இது முன்பு அதிக சத்தமிடும் பறவை எனக் கருதப் பட்டது).
இவற்றின் இனச்சேர்க்கைக்கான கூக்குரல்கள் ஹவ்லர் குரங்குகள் மற்றும் காட்டெருமை ஆகியவற்றின் அலறல்களை விட அதிகமான டெசிபல்களை (124.5 டெசிபல் வரை) கொண்டுள்ளன.