TNPSC Thervupettagam

உலகின் அதிவேக இணைய சங்கேதப் பண ஏற்பு நாடு

October 15 , 2022 646 days 343 0
  • பிளாக்செயின் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனமான செயினலிசிஸ், 2022 ஆம் ஆண்டிற்கான உலக இணைய சங்கேதப் பண ஏற்புக் குறியீட்டினை வெளியிட்டது.
  • மத்தியக் கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா (MENA) பிராந்தியத்தில் பெறப்பட்ட இணைய சங்கேதப் பணத்தின் அளவு 48 சதவீதம் அதிகரித்துள்ளது என்று இந்தக் குறியீடு வெளிப்படுத்தியது.
  • இது உலகிலேயே மிக உயர்ந்த அளவாகும்.
  • 2021 ஆம் ஆண்டு ஜூலை முதல் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு இடையில் 566 பில்லியன் மதிப்புள்ள இணைய சங்கேதப் பணமானது பெறப்பட்டது.
  • மத்தியக் கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா (MENA) பிராந்திய நாடுகளில் இணைய சங்கேதப் பணத்தின் அதிக மதிப்பைப் பெற்றுள்ளதன் மூலம் துருக்கி தற்போது முதலிடத்தில் உள்ளது.
  • மத்தியக் கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா (MENA) பிராந்திய  நாடுகளுக்குப் பிறகு, லத்தீன் அமெரிக்க நாடுகள் இரண்டாவது பெரிய இணைய சங்கேதப் பண வளர்ச்சியைக் கண்டது
  • இது 40 சதவீத உயர்வைப் பதிவு செய்துள்ளது.
  • அதைத் தொடர்ந்து வடக்கு அமெரிக்கா 36 சதவீத வளர்ச்சியையும், மத்திய ஆசியா, தெற்கு ஆசியா மற்றும் ஓசியானியா 35 சதவீத வளர்ச்சியையும் பெற்றுள்ளன.
  • மூன்று மத்தியக் கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா (MENA) பிராந்திய நாடுகள் - துருக்கி, எகிப்து மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகள் இந்தக் குறியீட்டில் முதல் 30 இடங்களில் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்