TNPSC Thervupettagam

உலகின் இடம்பெயர்ந்த உயிரினங்களின் நிலை குறித்த அறிக்கை

March 4 , 2024 137 days 241 0
  • இடம் பெயர்ந்த உயிரினங்களின் வளங்காப்பு தொடர்பான உடன்படிக்கையில் (CMS) பட்டியலிடப்பட்ட இனங்களில் 44 சதவீத (520 இனங்கள்) இனங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகி வருகின்றன.
  • ஐந்தில் ஒரு CMS இனங்கள் அழியும் அபாயத்தை எதிர்கொள்கின்றன.
  • CMS உடன்படிக்கையின் கீழ் பட்டியலிடப்பட்ட 97 சதவீத இடம் பெயர்ந்த மீன் இனங்கள் அழிந்து போகும் அபாயத்தை எதிர்கொள்கின்றன.
  • இந்த மீன் இனங்கள் சராசரியாக கடந்த 50 ஆண்டுகளில் ஒப்பீட்டளவில் அதிக சரிவைக் கண்டுள்ளன.
  • அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் மொத்த மீன் வகைகளில் 28 இனங்கள் 'அருகி வரும் இனங்கள்' என வகைப்படுத்தப் பட்டுள்ளன.
  • முதலாவது பிற்சேர்க்கையில் சேர்க்கப்பட்டுள்ள 82 சதவீதம் (பட்டியலிடப்பட்ட 180 இனங்களில் 142) இனங்கள் அழிந்து விடும் அபாயத்தினை எதிர்கொள்கின்றன.
  • 76 சதவிகித (137 இனங்கள்) இனங்களில் எண்ணிக்கை சரிவு பதிவாகியுள்ளது.
  • இரண்டாவது பிற்சேர்க்கையில் சேர்க்கப்பட்டுள்ள இனங்களில் 18 சதவிகிதம் அழியும் நிலையை எதிர்கொள்கின்றன மற்றும் சுமார் 42 சதவிகித (477 இனங்கள்) இனங்களில் எண்ணிக்கையில் சரிவுப் போக்குகள் பதிவாகியுள்ளன.
  • 4,508 இனங்கள் இடம் பெயர்ந்ததாகக் கருதப்படுகின்றன.
  • இவற்றில் 3,339 (74 சதவீதம்) இனங்கள் தற்போது CMS பிற்சேர்க்கையில் பட்டியலிடப் படவில்லை.
  • CMS பட்டியலில் இடம் பெறாத 3,339 இனங்களில், 277 (எட்டு சதவீதம்) இனங்கள் ‘உலகளவில் அச்சுறுத்தல் நிலையில் உள்ள இனமாகக்’ கருதப்படுகின்றன.
  • மேலும் 122 இனங்கள் (நான்கு சதவீதம்) 'அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனம்' ஆக வகைப்படுத்தப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்