TNPSC Thervupettagam

உலகின் இரண்டாவது சோலார் நெடுஞ்சாலை

December 31 , 2017 2392 days 804 0
  • உள்நாட்டுத் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான தனது முதல் ஒளிமின்னழுத்த நெடுஞ்சாலையை (photo voltaic highway) கிழக்கு மாகாணமான ஷன்டாங் மாகாணத்தில் சீனா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
  • இந்த சோலார் சாலையானது மின்காப்பு பெற்ற அடுக்கை (Insulating layer) அடிப்பாகத்திலும், சோலார் ஒளி மின்னழுத்த தகடுகளை (photo voltaic panel) இடையிலும், தெளிவாகத் தெரியத்தக்க கான்கிரீட்டை (Transparent Concrete) மேல் அடுக்காகவும் கொண்டது.
  • சோதனை செய்யப்பட்டுள்ள இந்த நெடுஞ்சாலை பிரிவானது 817.2 கிலோவாட் மின் ஆற்றலை உருவாக்கத்தக்கது. மேலும் இவை ஒவ்வொரு ஆண்டும் 1 மில்லியன் கிலோவாட் மின் ஆற்றலை உருவாக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • இந்த சோலார் நெடுஞ்சாலையால் உற்பத்தி செய்யப்பட்ட மின் ஆற்றலானது நெடுஞ்சாலை ஒளி விளக்குகள், சமிக்ஞை பலகைகள் (Sign Boards), கண்காணிப்பு கேமராக்கள், சுரங்கப்பாதை மற்றும் சுங்க கட்டணச் சாவடிகளின் சோதனை வசதிகள் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படும்.
  • இந்த நெடுஞ்சாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் உபரி மின் ஆற்றலானது அரசின் மின் கட்டமைப்பிற்கு (grid) வழங்கப்படும்.
  • சூரிய மின் தகடுகள் (Solar panels) பொதியப் பெற்ற உலகின் முதல் ஒளி மின்னழுத்த நெடுஞ்சாலை முதன் முறையாக பிரான்ஸ் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • தற்போது இத்தகு நெடுஞ்சாலையை கட்டமைத்திருக்கும் உலகின் இரண்டாவது நாடு சீனாவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்