TNPSC Thervupettagam

உலகின் சக்தி வாய்ந்த கடவுச் சீட்டுகள் 2024

July 27 , 2024 4 hrs 0 min 34 0
  • ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் வெளியிடப்பட்டுள்ள சமீபத்தியத் தரவரிசையில் இந்தியாவின் கடவுச்சீட்டு 82வது இடத்தில் உள்ளது.
  • இது 58 நாடுகளுக்கு இந்தியர்கள் நுழைவு இசைவுச் சீட்டு இல்லாமல் பயணிக்க அனுமதிக்கிறது.
  • சிங்கப்பூர் நாட்டின் கடவுச்சீட்டு ஆனது உலகின் சக்தி வாய்ந்த (அதிக பயண அணுகல்  கொண்டது) கடவுச் சீட்டு என்று குறிப்பிடப் பட்டுள்ளது என்பதோடு இதனைப் பயன்படுத்தி 195 நாடுகளுக்கு நுழைவு இசைவுச் சீட்டு இன்றி பயணிக்க இயலும்.
  • பிரான்சு, இத்தாலி, ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் 192 நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதற்கான அணுகலை வழங்குவதன் மூலம் அவை ஜப்பானுடன் இரண்டாவது இடத்தினைப் பகிர்ந்து கொள்கின்றன.
  • இத்தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள ஆஸ்திரியா, பின்லாந்து, அயர்லாந்து, லக்ஸம்பர்க், நெதர்லாந்து, தென் கொரியா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் அனைத்தும் 191 இடங்களுக்கு நுழைவு இசைவுச் சீட்டு இல்லாத அணுகலைப் பெற்று உள்ளன.
  • நியூசிலாந்து, நார்வே, பெல்ஜியம், டென்மார்க் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவற்றுடன் ஐக்கியப் பேரரசு நான்காவது இடத்தில் உள்ளது.
  • ஆஸ்திரேலியாவும் போர்ச்சுகலும் 5வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ள அதே நேரத்தில் 186 நாடுகளுக்கு நுழைவு இசைவுச் சீட்டு இல்லாத பயண அணுகலுடன் அமெரிக்கா எட்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
  • 33 நாடுகளுக்கான அணுகலுடன் பாகிஸ்தான் இந்தத் தரவரிசையில் 100வது இடத்தில் உள்ளது.
  • 26 இடங்களுக்கு எளிதாக பயணிக்கக் கூடிய ஆப்கானிஸ்தான் நாட்டின் கடவுச்சீட்டு இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்