TNPSC Thervupettagam

உலகின் சதுப்புநிலங்களின் நிலை குறித்த அறிக்கை 2024

August 6 , 2024 109 days 192 0
  • இது உலகளாவியச் சதுப்புநிலக் கூட்டணி (GMA) என்ற அமைப்பினால் தயாரிக்கப் படுகிறது.
  • இது 2020 ஆம் ஆண்டில் பதிவான 147,256 கிமீ² சதுப்புநிலங்களில் கணக்கெடுப்பினை மேற் கொண்டுள்ளதோடு மேலும் ஆறு புதியப் பிரதேசங்களுக்கான ஒரு தரவினையும் சேர்த்துள்ளது.
  • பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், உலகில் எஞ்சியிருக்கும் சதுப்புநிலக் காடுகளில் 40% மட்டுமே பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் உள்ளன.
  • மலேசியா மற்றும் மியான்மர் போன்ற சில நாடுகளில் 5 சதவீதத்திற்கும் குறைவான பாதுகாப்பு வசதிகளே உள்ளன.
  • இந்தோனேசியாவில் மட்டும் உள்ள 21% சதுப்பு நிலங்களுடன், தென்கிழக்கு ஆசியா உலகின் மூன்றில் ஒரு பங்கு சதுப்புநிலங்களைக் கொண்டுள்ளது.
  • இந்திய சதுப்புநிலங்களில் மட்டும் 21 குழுவினைச் சேர்ந்த 5,700 க்கும் மேற்பட்ட தாவர மற்றும் விலங்கு இனங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
  • இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் மிகப்பெரிய சதுப்புநிலப் பகுதி அமைந்துள்ளது, அதனைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில், முக்கியமாக கட்ச் வளைகுடா மற்றும் காம்பத் வளைகுடாவில் மிகப்பெரிய சதுப்பு நிலம் அமைந்துள்ளது.
  • மொத்தம் 5,746 இனங்களைக் கொண்டு, எந்தவொரு நாட்டிலும் இல்லாத அளவிற்கு பல்லுயிர்ப் பெருக்கத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ள நிலையில், இவற்றில் 4,822 இனங்கள் (84%) விலங்குகள் ஆகும்.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் சதுப்பு நிலங்களின் பாதுகாப்பினை சுமார் 80% என்ற அளவாக இரட்டிப்பாக்குவதை உலகளாவிய சதுப்புநிலக் கூட்டணி நோக்கமாகக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்