உலகின் சிறந்த நாடுகள் அறிக்கை 2023
September 20 , 2023
431 days
357
- அமெரிக்கச் செய்தி மற்றும் உலக அறிக்கை என்ற அமைப்பானது, உலகின் சிறந்த நாடுகளின் தரவரிசையை வெளியிட்டுள்ளது.
- சுவிட்சர்லாந்து, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உலகின் சிறந்த நாடாக இடம் பெற்றுள்ளது.
- 2017 முதல் 2020 ஆம் ஆண்டு வரையில், அதாவது 2021 ஆம் ஆண்டில் கனடா முதலிடம் பெறும் வரை முதல் இடத்தில் சுவிட்சர்லாந்து இடம் பெற்றிருந்தது.
- உலகின் இரண்டாவது சிறந்த நாடாக கனடா பட்டியலிடப் பட்டுள்ளது.
- அதைத் தொடர்ந்து சுவீடன் 3வது இடத்திலும், ஆஸ்திரேலியா 4வது இடத்திலும், அமெரிக்கா 5வது இடத்திலும் உள்ளன.
- இந்தியா இந்தத் தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி 30வது இடத்தைப் பிடித்துள்ளது.
Post Views:
357