உலகின் சிறந்த 30 சிஇஒ பட்டியல் – பாரோன் பத்திரிக்கை
June 3 , 2018 2369 days 655 0
தொடர்ச்சியாக மூன்றாவது வருடமாக, ஹெச்டிஎப்சி (HDFC) வங்கியின் நிறுவன இயக்குநர் ஆதித்ய பூரி புகழ்பெற்ற நீதித்துறை பத்திரிக்கையான பாரோன் வெளியிடும் உலகின் தலைசிறந்த 30 தலைமை நிர்வாக அதிகாரி பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய தலைமை அதிகாரி ஆதித்ய பூரி ஆவார்.
இப்பட்டியலானது தமது 14வது பதிப்பில், அமேசானின் ஜெப் பெஜோஸ், பெர்க்கையர் ஹாத்வேயின் வாரன் பப்பெட், JP மார்கன் சேஸின் ஜேமி டைமோன் , நெட்ப்ளிக்ஸின் பீட்ஹெஸ்டிங்ஸ், மைக்ரோசாப்டின் சத்ய நாதெள்ளா மற்றும் பேஸ்புக்கின் மார்க் ஜீகர்பெர்க் ஆகியோரையும் கொண்டதாகும்.
தலைமை அதிகாரிகளுக்கென்று வகுத்த 3 பட்டியலில், ஆதித்ய பூரி முன்னேறும் தலைவர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
மற்ற இரு பிரிவுகளாவன – தொலைநோக்கு கொண்ட நிறுவனர்கள் மற்றும் மாற்றம் ஏற்படுத்தும் நிபுணர்கள்.
67 வயதான ஆதித்ய பூரி 1994 HDFC வங்கி துவங்கிய காலத்தில் இருந்தே அதன் மேலாண்மை இயக்குநராக உள்ளார்.