TNPSC Thervupettagam
February 27 , 2023 510 days 379 0
  • இந்தூரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் மாணவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்ற உலக அரசாங்க உச்சி மாநாட்டில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் 1 மில்லியன் AED (ஐக்கிய அரபு அமீரகம் திராம்கள்) பரிசினை வென்றுள்ளனர்.
  • இந்தூரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் நியாதி டோட்டாலா மற்றும் நீல் கல்பேஷ்குமார் பரிக் ஆகியோருக்கு எகிப்து அதிபர் ஏபெல் ஃபத்தா அல்-சிசி அவர்கள் இந்த மதிப்புமிக்கப் பதக்கத்தினை வழங்கினார்.
  • இவர்களே 'பிளாக்பில்' எனும் செயலியை உருவாக்கியர்கள் ஆவர்.
  • பிளாக்பில் என்பது அதன் அனைத்துப் பயனர்களின் பரிவர்த்தனைகளுக்குமான எண்ணிம முறை ரசீதுகளை உருவாக்குகிற வகையிலான, தொடர்சங்கிலித் தொழில் நுட்பம் அடிப்படையிலான ரசீது உருவாக்கச் செயலியாகும்.
  • "M-Gov விருது" மற்றும் "GovTech விருது" ஆகியவை உலக அரசாங்க உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தினால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் விருதுகள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்