ஃப்ரேசர் நிறுவனம் ஆனது 2024 ஆம் ஆண்டிற்கான “உலகின் பொருளாதாரச் சுதந்திர” அறிக்கையினைத் தொகுத்துள்ளது.
சிங்கப்பூர் நாட்டினைப் பின்னுக்குத் தள்ளி உலகின் சுதந்திரமானப் பொருளாதாரம் என்றப் பட்டத்தை ஹாங்காங் மீண்டும் பெற்றுள்ளது.
3வது இடத்தில் சுவிட்சர்லாந்து நாடும் அதனைத் தொடர்ந்து நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.
3.02 மதிப்பெண்களுடன் வெனிசுலா கடைசி இடத்தை (165வது) பிடித்தது.
மற்ற முக்கியப் பொருளாதாரங்களின் தர வரிசையில் ஜப்பான் 11வது இடத்திலும், பிரிட்டன் 12வது இடத்திலும், தைவான் 19வது இடத்திலும், இந்தியா 84வது இடத்திலும், சீனா 104வது இடத்திலும் இதில் உள்ளன.