நியூயார்க் நகரம் ஆனது உலகின் செல்வ வளம் மிக்க நகரமாக அதன் நிலையைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது என்பதோடு 11 அமெரிக்க நகரங்கள் இந்தப் பட்டியலில் முதல் 50 இடங்களில் இணைந்துள்ளன.
ஒரு தசாப்தத்திற்கு முன் முதலிடத்தில் இருந்த டோக்கியோ, அதன் அதிக நிகர சொத்து மதிப்புள்ள தனிநபர் மக்கள் தொகையில் பதிவான பெரும் சரிவு காரணமாக தற்போது மூன்றாவது இடத்திற்கு சரிந்துள்ளது.
முன்னணி ஆசிய நிதி மையமாக சிங்கப்பூர் நான்காவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
பழமையான நிதி மையமான லண்டன் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்தியா இரண்டு நகரங்களுடன் இப்பட்டியலில் முதல் 50 இடங்களில் இடம் பெற்று உள்ளது.
மும்பை மற்றும் டெல்லி ஆகியவை முறையே 24வது மற்றும் 37வது இடங்களில் உள்ளன.