TNPSC Thervupettagam

உலகின் நான்காவது பெரிய பொருளாதாரம்

February 22 , 2024 148 days 257 0
  • ஜப்பான் நாடானது அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு அடுத்த படியாக உலகின் நான்காவது பெரிய பொருளாதாரம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
  • ஜப்பான் நாட்டின் பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியானது கடந்த ஆண்டு மொத்தம் 4.2 டிரில்லியன் டாலர் அல்லது சுமார் 591 டிரில்லியன் யென் ஆக இருந்தது.
  • ஜெர்மனி நாட்டின் பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியானது நாணய மதிப்பு மாற்றத்தைப் பொறுத்து 4.4 டிரில்லியன் டாலர் அல்லது 4.5 டிரில்லியன் டாலர் ஆக உள்ளது.
  • ஜப்பானிய மக்களின் வயது முதிர்வு மற்றும் குறைவான குழந்தைகள் பிறப்பு காரணமாக ஜப்பான் நாட்டின் மக்கள் தொகை குறைந்து வருவதால் ஜப்பான் நாட்டின் பொருளாதாரம் ஆனது படிப்படியாக அதன் போட்டித்திறன் மற்றும் உற்பத்தித் திறனை இழந்துள்ளது.
  • 2010 ஆம் ஆண்டில், சீனாவின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்ததால் ஜப்பான் இரண்டாவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
  • வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் வளர்ந்து வரும் நாடுகளுக்கும் இடையிலான இடைவெளி சுருங்கி வருகிறது என்ற நிலையில் சில ஆண்டுகளில் பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜப்பானை இந்தியா முந்தும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்