ஏர்போர்ட் கவுன்சில் இன்டர்நேஷனல் (Airport Council international) எனும் நிறுவனத்தினால் 2017 ஆம் ஆண்டிற்கான உலகின் பரபரப்பான விமான நிலையங்களின் (World’s Busiest Airport) பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சர்வதேச வான் பயணத்திற்கான வகைப்பிரிவில் உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாக துபாய் சர்வதேச விமான நிலையம் அறிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
ஒட்டுமொத்த விமான சேவைகள் வகைப் பிரிவில், உலகின் மிகவும் பரபரப்பான சர்வதேச விமான நிலையமாக ஜார்ஜியாவில் உள்ள ஹாட்ஸ்பீல்டு-ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமான நிலையம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒற்றை ஓடுதள பயன்பாட்டு வசதியுடைய விமான நிலையங்களுள் உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாக, மும்பையின் சத்ரபதி சிவாஜி மஹாராஜ் சர்வதேச விமான நிலையம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையம் நாளொன்றுக்கு சுமார் 837 விமானப் போக்குவரத்தை கையாளுகிறது.