சர்வதேச விமான நிலைய சபையின் அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 8.5 பில்லியன் பயணிகள் விமானத்தில் பயணித்தனர்.
இது முந்தைய ஆண்டை விட 27.2% அதிகமாகும்.
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், 2023 ஆம் ஆண்டில் 72.2 மில்லியன் பயணிகள் பயணித்ததன் மூலம் இந்தப் பட்டியலில் 10வது இடத்தைப் பெற்றுள்ளது.
2023 ஆம் ஆண்டில் 104.65 மில்லியன் பயணிகள் பயணித்ததுடன் அட்லாண்டா விமான நிலையம் மீண்டும் உலகின் பரபரப்பான விமான நிலையம் என்ற இடத்தினைப் பெற்றுள்ளது.
இந்தப் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள DBX இரண்டாவது இடத்திற்கு உயர்ந்துள்ளது மற்றும் டல்லாஸ்-ஃபோர்ட் வொர்த் சர்வதேச விமான நிலையம் அதற்கு அடுத்த இடத்தில் உள்ளது.