சைபீரியாவின் தொலைதூரப் பகுதியில் 8,000 ஆண்டுகளுக்கு முந்தைய உலகின் மிகப் பழமையான கோட்டையைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது.
வேட்டையாடி உணவு சேகரித்து வாழ்ந்த குழுவினர், முன்பு நாம் கருதிய கால கட்டத்திற்கு முன்னதாகவே சிக்கலானப் பாதுகாப்பு கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளனர் என்பதை இது குறிக்கிறது.
இந்தத் தளம் மேற்கு சைபீரியாவிலுள்ள அம்னியா நதிக்கரையில் அமைந்துள்ளது.
ஆங்காங்கே காணப்படுகின்ற, இந்த நிலத்தடியில் அமைக்கப்படும் சுமார் 20 குழி வீடுகள் அமைந்திருந்த பள்ளங்கள் அம்னியா I மற்றும் அம்னியா II என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.