பெரும்பாலும் “Trembling Giant“ என்று குறிப்பிடப் படுகின்ற பாண்டோ என்ற மரமானது, அமெரிக்காவில் உட்டாவின் ஃபிஷ்லேக் தேசிய வனப்பகுதியில் அமைந்துள்ளது.
இந்த மாபெரும் உயிரியல் படியெடுப்பு சார்ந்த ஆஸ்பென் மரத் தோட்டம் ஆனது, 106 ஏக்கருக்கு மேல் பரவியுள்ளதோடு இது நிலத்தடியில் தன் வேர் அமைப்பால் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளது, இதனால் இது பூமியில் பரவல் அளவின் அடிப்படையில் மிகப்பெரிய உயிரினமாக குறிப்பிடப்படுகிறது.
இது சுமார் 80,000 ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப்பட்டுள்ளதோடு பாண்டோ மரமானது புவியின் பழமையான உயிரினங்களில் ஒன்றாகும்.