பார்பரா சேர்வுட் லோல்லர் (Barbara Sherwood Lollar) எனும் புவிசார் வேதியியலாளர் உலகின் ஆழமான சில சுரங்கங்களில் சுற்றித் திரிந்து பல மில்லியன் ஆண்டுகள் காலத்திய பழமையான நீரினைக் கண்டறிந்து அதனைப் பிரித்தெடுப்பதிலேயே தனது பெரும்பாலான வாழ்வைக் கழித்தார்.
நேச்சர் கம்யூனிகேசன் எனும் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் 2009 ஆம் ஆண்டில் கனடாவின் ஒரு சுரங்கத்திலிருந்து அவர் பிரித்தெடுத்த நீர் 1.6 பில்லியன் ஆண்டுகள் பழமையானது எனக் கூறப்பட்டுள்ளது.
இது நமது கோளில் கண்டெடுக்கப்பட்ட மிகப் பழமையான நீராகும்.