உலகின் பழமையான மர கட்டமைப்பு
September 29 , 2023
422 days
323
- தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இதுவரை அறியப்பட்ட, சுமார் அரை மில்லியன் ஆண்டுகள் பழமையான மரக் கட்டமைப்பினைக் கண்டெடுத்துள்ளனர்.
- இந்த எளியக் கட்டமைப்பானது ஜாம்பியாவில் உள்ள ஒரு ஆற்றங்கரையில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
- இந்த அமைப்பு ஒரு பெரிய பழம் காய்க்கும் வில்லோ மரத்தால் செய்யப்பட்ட, ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இரண்டு மரக்கட்டைகளைக் கொண்டுள்ளது.
- இது உலகின் மிகப் பழமையான மர கட்டமைப்பு என நம்பப்படுகிறது.
- இந்த அமைப்பு 476,000 ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப்பட்டுள்ளது.
- இது கணிசமான வித்தியாசத்தில் நவீன மனிதர்களின் காலத்தினை முன் கூட்டியதாகக் குறிப்பிடுகிறது.
- இந்தக் கட்டமைப்பின் காலம் ஆனது, இது ஹோமோ ஹைடெல்பெர்கென்சிஸ் இனத்தினால் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிடுகிறது.
- இந்த ஹோமினின் இனம் ஆனது 700,000 முதல் 200,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது.
Post Views:
323