TNPSC Thervupettagam

உலகின் பழமையான மூங்கில் புதைபடிவம்

February 8 , 2020 1625 days 683 0
  • 1941 ஆம் ஆண்டில் பட்டகோனியாவில் முன் ஊழிக் காலத்தின் தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு இலைக் கிளையின் புதைபடிவமானது இன்றும் உலகின் மிகவும் பழமையான மூங்கில் என்று கருதப் படுகின்றது.
  • மேலும்  பென்சில்வேனியா மாகாணப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பீட்டர் வில்ப் என்பவரால் சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்தத் தாவரத்தின் உண்மைத் தன்மையானது (சுஸ்கியா ஆக்ஸிஃபில்லா) தெரிய வந்தது.
  • பண்டைய கோண்டுவானாவின் தெற்கு நிலப் பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட மூங்கில் பெரும் புதைபடிவமானது பழமையானதாகக் கருதப்படுகின்றது. இந்த நிலையில் தற்போதைய திருத்தப்பட்ட இந்த ஆய்வானது முக்கியமானதாகக் கருதப் படுகின்றது.
  • வடக்கு அரைக் கோளத்தில் மூங்கில் இருப்பதற்கான மிகப் பழமையான நுண் புதைபடிவங்கள் இருப்பதற்கான சான்றுகள் மத்திய   முன் ஊழிக் காலத்தைச் சேர்ந்தவையாக உள்ளன.
  • மற்ற தென் அமெரிக்கப் புதைபடிவங்கள் பிளியோசீன் காலக் கட்டத்தை விட பழமையானவை அல்ல. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்