TNPSC Thervupettagam

உலகின் பாதுகாப்பான இடங்கள் அறிக்கை

November 15 , 2018 2107 days 584 0
  • “Which? Traval” என்ற நிறுவனத்தின் அறிக்கையின்படி ஐஸ்லாந்து ஆனது பயணம் செய்வதற்கான மிகவும் பாதுகாப்பான நாடாகும்.
  • ஐஸ்லாந்து ஆனது குறைந்த இயற்கைப் பேரழிவு அபாயம் மற்றும் குறைந்த குற்ற விகிதங்கள் ஆகியவற்றுடன் அறிக்கையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • இது உலகெங்கிலும் உள்ள 20 பிரபலமான பயண இடங்களை பாதுகாப்பின் அடிப்படையில் தரவரிசைப் படுத்தியுள்ளது.
  • ஐஸ்லாந்தையடுத்து ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன.
  • தென் ஆப்பிரிக்காவானது அதிக குற்ற விகிதம், சுகாதாரம் மற்றும் பயங்கரவாத அபாயங்களுடன் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.
  • துருக்கி இரண்டாவது மிக ஆபத்தான நாடாக தாய்லாந்திற்கு முன்னதாக உள்ளது.
  • பட்டியலிடப்பட்ட 20 நாடுகளில் இந்தியா 17-வது இடத்தில் வைக்கப்பட்டு உள்ளது.
  • குற்ற விகிதங்கள், பயங்கரவாத தாக்குதல்கள், இயற்கைப் பேரிடர்கள், மற்றும் சுகாதாரம் தொடர்புடைய காரணிகளைப் பரிசீலித்த பின்னர் இந்த தரவு தொகுக்கப்பட்டுள்ளது.
  • இந்த தகவல்களானது
    • குற்றவியல் விகிதங்கள் மீதான உலக பொருளாதார நிதியம்
    • இயற்கைப் பேரிடர்கள் மீதான உலக அபாய அறிக்கை
    • சுகாதாரம் மீதான “NHS fit for Travel” வலைதளம் மற்றும்
    • பயங்கரவாத அபாயங்கள் குறித்த வெளியுறவுத்துறை அலுவலகங்களின் மதிப்பீடு
ஆகிய நிறுவனங்களின் அறிக்கைகளில் இருந்து பெறப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்