TNPSC Thervupettagam

உலகின் பாலூட்டிகள் அழிவின் தலைநகரம்

October 15 , 2022 645 days 356 0
  • வரவிருக்கும் பத்தாண்டுகளில் ஏற்பட உள்ள எந்தவொரு விலங்கு அல்லது தாவர அழிவினையும் தடுப்பதற்கு ஆஸ்திரேலியா உறுதி பூண்டுள்ளது.
  • ஆஸ்திரேலியாவில் கூடுதலாக 50 மில்லியன் ஹெக்டேர் (124 மில்லியன் ஏக்கர்) நிலம், அதாவது நாட்டின் 30%க்கும் அதிகமான நிலப்பரப்பானது, 2027 ஆம் ஆண்டிற்குள் பாதுகாக்கப்படும்.
  • இதற்காக, அரசானது புதிய அச்சுறுத்தல் நிலையில் உள்ள உயிரினங்கள் செயல் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
  • இந்தப் புதிய கொள்கையின் கீழ், அடுத்த 10 ஆண்டுகளில் 110 "முன்னுரிமை இனங்கள்" பாதுகாக்கப்படும்.
  • இதில் கோலா, குவாக்கா மற்றும் வடக்கு ஹேரி நோஸ் வொம்பாட் ஆகியவை அடங்கும்.
  • அடுத்தப் பத்து ஆண்டுகளில் புதிய அழிவுகள் எதுவும் ஏற்படாது என்றும் அரசாங்கம் உறுதியளிக்கிறது.
  • உலகிலேயே அதிகளவில் உயிரினங்கள் அழியும் விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்றாகும்.
  • இது காட்டு விலங்குகளின் பரவல், பருவநிலை மாற்றம் மற்றும் பரவலான காடழிப்பு ஆகியவற்றால் ஏற்படுகிறது.
  • பிப்ரவரி மாதத்தில், கோலா கரடிகள் முதன்முறையாக "அழிந்து வரும்" இனமாக அந்த அரசினால் அதிகாரப் பூர்வமாக பட்டியலிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்