TNPSC Thervupettagam

உலகின் புதிய தீவு

December 14 , 2017 2536 days 937 0
  • “ஹீங்கா டோங்கா ஹீங்கா ஹாபாய்“ எனும் உலகின் புதிய தீவு  பசுபிக் பெருங்கடலின் உட்பகுதியில்   ஆஸ்திரேலியாவின் அருகில்  மூன்று ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பின் காரணமாக உருவானது.
  • பசுபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா தீவின் தலைநகரான நுகுவா அலோவிற்கு 65 கி.மீ தொலைவில் வட மேற்கு திசையில் கடற்படுகைகளின் மேல் இத்தீவு உருவாகியுள்ளது.
  • இத்தீவினுடைய நெகிழ் திறனின் காரணமாக 6 லிருந்து 30 வருடங்களில் பசுபிக் பெருங்கடலின் ஏதேனும் ஒரு பகுதியில் இத்தீவு மறைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
  • வெப்ப சீதோஷண கடல் நீரானது கடல் எரிமலை வெடிப்பின் போது அவற்றால் உண்டாகும் சாம்பல்களோடு இணைவதால் TUFF எனும் இலகு நுண்துவாரங்களுடைய பாறைகள் போன்ற கான்கிரிட் அமைப்பு உருவாகுவதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகின்றது.
  • மேலும் இவை செவ்வாய் கிரகத்தின் எரிமலைகள் போன்று பல எரிமலைகளை  கொண்டுள்ளதால் இத்தீவின் வாழ்க்கை சுழற்சியினைப் பற்றிய ஆய்வானது செவ்வாய் கிரகத்தின் சுற்றுச்சூழலைப் பற்றிய தெளிவான உட்பார்வையை தரும் என ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்