தென் பசிபிக் தீவுக் கூட்டத்தில் உள்ள போகன்வில்தீவானது பப்புவா நியூ கினியாவிலிருந்துப் பிரிந்து ஒரு சுதந்திர நாடாக உருவாவதற்கு அந்நாடு வாக்களித்து இருக்கின்றது.
போகன்வில் தீவானது உலகின் புதிய மற்றும் சிறிய சுதந்திர நாடாக உருவெடுக்க இருக்கின்றது.
பங்கூனா சுரங்கமானது (போகன்வில்செம்பு சுரங்கம் என்றும் அழைக்கப்படுகின்றது) உலகின் மிகப்பெரிய செம்பு (தாமிரம்) இருப்புக்களைக் கொண்டிருக்கின்றது.
இது உலகின் ஒரு மிகப்பெரிய திறந்த - வெளிச் செம்பு சுரங்கமாகும்.
இந்நாட்டில் அதிகமாகப் பேசப்படும் மொழி ஹாலியா மொழியாகும்.
ஐக்கிய நாடுகள் சபையில் இந்நாடு தனது அங்கீகாரத்தை இன்னும் நிரூபிக்கவில்லை.