TNPSC Thervupettagam

உலகின் புத்தாக்கத்திற்கான குறியீடு

July 12 , 2018 2328 days 643 0
  • உலகின் புத்தாக்கத்திற்கான குறியீடு (Global Innovation Index - GII) இந்தியாவை உலகிலேயே மிகவும் அதிக அளவிலான புதிய கண்டுப்பிடிப்புகளை கொண்ட நாடு என்ற வகையில் 57வது இடத்தில் வைத்துள்ளது.
  • 2017-ல் இருந்த 60வது இடத்திலிருந்து 3 இடங்கள் வரை தனது இடத்தினை இந்தியா முன்னேற்றியுள்ளது.
  • இது GII-ன் 11வது பதிப்பு ஆகும். இது கார்னல் பல்கலைக்கழகம், INSEAD மற்றும் உலக அறிவுசார் சொத்துகளுக்கான அமைப்பு (WIPO - World Intellectual Property Organisation) ஆகியவற்றால் இணைந்து வெளியிடப்பட்டது.
  • மத்திய மற்றும் கிழக்கு ஆசியப் பகுதிகளில் இந்தியா தனது முதல் இடத்தை தொடர்ந்து கைப்பற்றி வருகிறது.
  • 2015-ல் 81-வது இடத்தில் இருந்ததிலிருந்து இந்தியா படிப்படியாக முன்னேறி வருகிறது. இதே நேரத்தில் 2017-ல் 22வது இடத்தில் இருந்த சீனா இந்த வருடம் 17வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
  • GII உலகத்தர வரிசை ஐக்கிய நாடுகளின் (United Nations) சிறப்பு நிறுவனமான WIPO-னால் வெளியிடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்