ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன தரவரிசைகளில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் உலகின் மிகச்சிறந்த புத்தாக்க பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டான்போர்டு பல்கலைக்கழகமானது கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தப் பட்டியலில் முதலிடம் வகிக்கின்றது.
அமெரிக்காவின் மாசசூட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (MIT - Massachusetts Institute of Technology) மற்றும் ஹார்வார்டு பல்கலைக்கழகம் ஆகியவை இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்துள்ளன.
இப்பட்டியலின் முதல் 100 இடங்களில் 46 பல்கலைக்கழகங்களுடன் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துகிறது. இதில் எந்தவொரு இந்தியப் பல்கலைக்கழகங்களும் இடம்பெறவில்லை.
ராய்ட்டர்ஸின் உலகின் மிகச்சிறந்த 100 புத்தாக்க பல்கலைக்கழகத் தரவரிசையானது உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களை, அவற்றின் புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்தல், மேம்பட்ட அறிவியல் & ஆற்றல், புதிய சந்தைகள் மற்றும் தொழிலகங்களில் பணிகள் ஆகிய கூறுகளின் அடிப்படையில் அங்கீகரிக்கிறது.
இது 2015-ல் முதன்முதலில் வெளியிடப்பட்டது. அதிலிருந்து எந்த இந்தியப் பல்கலைக்கழகங்களும் இப்பட்டியலில் இடம்பெறவில்லை.