TNPSC Thervupettagam

உலகின் மிகப்பழமையான சூரியதிசைமானி

October 28 , 2017 2583 days 876 0
  • ஓமன் கடற்கரைப் பகுதியில், விபத்தில் சிக்கிய மூழ்கிய கப்பலின் சேதப் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட சூரிய திசைமாணி, உலகின் மிகப்பழமையான கடல்வழி திசைகாட்டும் கருவி என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • கடற்சார் தொல்லியளாளர்களைப் பொருத்து, இக்கருவி, கடற்பயணிகளால், சூரியனின் தொலைவினை கணிக்க உதவியது.
  • இது 1495 முதல் 1500 வரையிலான காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். இதனைப் பயன்படுத்தி 16-ம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியர்கள் இந்தியாவிற்கு கடற்பயணங்களை மேற்கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
  • சூரிய திசைமானி என்பது பண்டைய காலத்தொட்டே பயன்பட்டுவரும் கருவி. ஆனால் போர்ச்சுக்கீசிய கடல்வழி மாலுமிகள் இதனை கடற்பயணத்திற்காக மேம்படுத்தி வடிவமைக்கின்றனர். சூரியன் மற்றும் நட்சத்திரங்களின் தொலைவு, திசையைக் கொண்டு, கடற்பயணங்களில் கப்பலின் திசையை தீர்மானித்தனர்.
  • எஸ்மேரால்டா என்பது இக்கப்பலின் பெயராகும். இது ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு முதன் முதலாக கடல் வழியில் பயணித்த போர்ச்சுகீசிய பயணியான வாஸ்கோடகாமா பயணித்த கடற்பயணப் படையின் ஒரு பகுதியாகும்.
  • இந்தத் திசைமானி, வெண்கல தகடுகளால் ஆனது. இதில் இரு முத்திரைகள் உள்ளன. முதலாவது போர்ச்சுக்கீசிய ஆயுதமும், இரண்டாவது, அரசர் முதலாம் மானுவேல்லின் தனிப்பட்ட முத்திரையும் ஆகும். இவர் 1495-ம் ஆண்டு பட்டம் சூட்டிக்கொண்டவர் ஆவார் .

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்