ஓமன் கடற்கரைப் பகுதியில், விபத்தில் சிக்கிய மூழ்கிய கப்பலின் சேதப் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட சூரிய திசைமாணி, உலகின் மிகப்பழமையான கடல்வழி திசைகாட்டும் கருவி என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடற்சார் தொல்லியளாளர்களைப் பொருத்து, இக்கருவி, கடற்பயணிகளால், சூரியனின் தொலைவினை கணிக்க உதவியது.
இது 1495 முதல் 1500 வரையிலான காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். இதனைப் பயன்படுத்தி 16-ம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியர்கள் இந்தியாவிற்கு கடற்பயணங்களை மேற்கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
சூரிய திசைமானி என்பது பண்டைய காலத்தொட்டே பயன்பட்டுவரும் கருவி. ஆனால் போர்ச்சுக்கீசிய கடல்வழி மாலுமிகள் இதனை கடற்பயணத்திற்காக மேம்படுத்தி வடிவமைக்கின்றனர். சூரியன் மற்றும் நட்சத்திரங்களின் தொலைவு, திசையைக் கொண்டு, கடற்பயணங்களில் கப்பலின் திசையை தீர்மானித்தனர்.
எஸ்மேரால்டா என்பது இக்கப்பலின் பெயராகும். இது ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு முதன் முதலாக கடல் வழியில் பயணித்த போர்ச்சுகீசிய பயணியான வாஸ்கோடகாமா பயணித்த கடற்பயணப் படையின் ஒரு பகுதியாகும்.
இந்தத் திசைமானி, வெண்கல தகடுகளால் ஆனது. இதில் இரு முத்திரைகள் உள்ளன. முதலாவது போர்ச்சுக்கீசிய ஆயுதமும், இரண்டாவது, அரசர் முதலாம் மானுவேல்லின் தனிப்பட்ட முத்திரையும் ஆகும். இவர் 1495-ம் ஆண்டு பட்டம் சூட்டிக்கொண்டவர் ஆவார் .