உலகின் மிகப்பெரியக் குடும்பத்தின் தலைவரான சியோனா சானா தனது 76 வயதில் காலமானார்.
இவர் மிசோரத்தை சேர்ந்தவர் ஆவார்.
இவர் குறைந்தபட்சமாக 39 மனைவிகள், 94 குழந்தைகள் மற்றும் 33 பேரக் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.
இவர் சானா பாவ்ல் எனப்படும் ஒரு கிறித்துவப் பிரிவின் தலைவராவார்.
இந்தப் பிரிவில் ஆண்களுக்கு பலதார மணம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
உலகின் மிகப்பெரியக் குடும்பத்தைக் கொண்டிருந்ததற்காக இவர் 2011 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் ரிப்லேயின் நம்பினால் நம்புங்கள் (Ripley's Believe It or Not) என்ற புத்தகத்தில் இடம் பெற்றார்.