உலக ஆயுதச் சந்தையில் ஆயுத இறக்குமதி செய்யும் மிகப்பெரிய நாடாக சவுதி அரேபியா மாறியுள்ளது.
எட்டு ஆண்டுகள் தொடர்ந்து முதலிடத்தில் இருந்த இந்தியாவானது இரண்டாவது இடத்திற்கு இறங்கியுள்ளது.
இது ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சிந்தனைச் சாவடியான ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) சர்வதேச ஆயுத பரிமாற்றப் போக்கு - 2018 எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட வருடாந்திர அறிக்கையின் அடிப்படையிலானது.