சீனாவிற்கு அடுத்தபடியாக, வியட்நாமை பின்னுக்குத் தள்ளி உலகின் இரண்டாவது பெரிய கைபேசி (Mobile Phones) உற்பத்தியாளர் நாடாக இந்தியா உருவாகியுள்ளது.
இந்திய செல்லுலார் அசோசியேஷன் (Indian Cellular Association-ICA) அமைப்பினால் வழங்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்தத் தகவலை மத்திய அரசு பகிர்ந்துள்ளது.
இந்தத் தகவலின் படி இந்தியாவில் வருடாந்திர கைபேசி உற்பத்தியின் அளவு அதிகரித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு 3 மில்லியன் யூனிட்டுகள் என்றிருந்த உற்பத்தி அளவானது 2017ல் 11 மில்லியன் யூனிட்களாக அதிகரித்துள்ளது.
இந்திய செல்லுலார் அசோசியேஷனால் பகிரப்பட்டுள்ள தரவுகளின் படி 2014 ஆம் ஆண்டின் 3 சதவீதத்தை ஒப்பிடுகையில் 2017 ஆம் ஆண்டில் உலக கைபேசி உற்பத்தியில் 11 சதவீதத்தை இந்தியா கொண்டுள்ளது.
சீனா, இந்தியா, வியட்நாம் ஆகிய நாடுகள் உலகின் முதல் மூன்று கைபேசி உற்பத்தியாளர் நாடுகளாகும்.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழிற்நுட்ப (Ministry of Electronics and IT) அமைச்சகத்தின் கீழ் அரசு Fast Track Task Force (FTTF) என்ற அமைப்பைத் துவங்கியுள்ளது.
இது 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் 500 மில்லியன் கைபேசிகளின் உற்பத்தியினை அடைய இலக்கினை நிர்ணயித்துள்ளது.