இந்திய அணியின் முன்னாள் தலைவரும் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தற்போதைய தலைவருமான முஹமது அசாருதின் மிகப்பெரிய கிரிக்கெட் மட்டையைத் திறந்து வைத்தார்.
இது பெர்னார்டு ரிகார்டு இந்தியா லிமிடெட் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டது.
பாப்லர் என்ற மரத்தினால் ஆன இந்த மட்டையானது 56.10 அடி உயரமும் 9 டன் எடையும் கொண்டது.
இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்காகவும், துபாயில் டி20 உலகக் கோப்பையை மீண்டும் பெறச் செய்வதற்காகவும் இத்தகைய ஒன்று திறக்கப் பட்டுள்ளது.