உலகின் மிகப்பெரிய 'சட்டவிரோதமான போதைப் பொருள் வர்த்தகத்தினைச் சார்ந்திருக்கும் நாடு'
April 30 , 2023 577 days 244 0
சிரியா, உலகின் மிகப்பெரிய சட்டவிரோதமான போதைப் பொருள் வர்த்தகத்தினைச் சார்ந்திருக்கும் ('நார்கோ-ஸ்டேட்') நாடாக மாறியுள்ளது.
அதன் பொருளாதார வாழ்வானது கேப்டகனின் உற்பத்தி மற்றும் அதன் ஏற்றுமதியைப் பெரிதும் சார்ந்துள்ளது.
கேப்டகன் என்பது பொதுவாக "விருந்தளிப்பு மாத்திரைகள் மற்றும் "ஏழைகளின் கொக்கைன்" என்று அழைக்கப் படுகிறது.
இது ஐக்கிய நாடுகள் சபையின் போதைப் பொருள் மற்றும் குற்ற UNODC (2021) அலுவலகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட, தடை செய்யப்பட்ட ஒரு சட்டவிரோத போதைப் பொருள் ஆகும்.
இது ஆம்பெடமைன் மற்றும் காஃபின் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு செயற்கை நரம்பியல் செயல்முறை தூண்டு பொருளாகும்.
"நார்கோ-ஸ்டேட்" என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் குறிப்பிட்டப் பிரிவானது சட்ட விரோதப் போதை மருந்துகளின் வர்த்தகத்தைச் சார்ந்திருக்கும் ஒரு தேசம் என்பதாகும்.