கர்நாடக மாநிலத்தின் தும்கூர் மாவட்டத்திலுள்ள பவகடா தாலுக்காவில் அமைந்துள்ள சக்தி ஸ்தலம் உலகின் மிகப்பெரிய சூரியசக்தி பூங்காவாக உருவெடுத்துள்ளது. இப்பூங்கா, கர்நாடக முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.
முதல் கட்டமாக இந்தப் பூங்காவில் 600MW மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2019ல் இரண்டாவது கட்டமாக 1400 MW மின் உற்பத்தி இதில் தொடங்கப்படும்.
முழுவதுமாக செயல்பாட்டுக்கு வந்த பின்னர், இந்த சூரியசக்தி பூங்கா 2000 MW மின் உற்பத்தி செய்யும். தற்போது வரை உலகின் மிகப் பெரிய சூரியசக்தி பூங்காவாக சீனாவிலுள்ள டென்கர் பாலைவன சூரியசக்தி பூங்கா இருந்து வந்தது.
இந்த கர்நாடக சூரியசக்தி பூங்காவின் தனிச் சிறப்பு என்பது, இந்த பூங்கா அமைப்பதற்கான நிலம் உள்ளூர் மக்களிடமிருந்து 25 ஆண்டுகளுக்கு குத்தகையாகப் பெறப்பட்டது. ஆனால் பொதுவாக நிலம் கையகப்படுத்தலே நடைமுறையில் உள்ளது.
கர்நாடக புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் இந்திய சூரியசக்தி ஆற்றல் நிறுவனம் ஆகியவற்றின் கூட்டிணைப்பால் உருவாக்கப்பட்ட கர்நாடக ஆற்றல் மேம்பாட்டு நிறுவனத்தின் தொடக்கமே (initiative) இந்தப் பூங்கா அமைப்பாகும்.
இந்த சூரியசக்தித் திட்டமானது கர்நாடக சூரியசக்திக் கொள்கை 2014 – 2021ன் ஒரு பகுதியாகும்.
கர்நாடகா, இந்தியாவில் மூன்றாவது மிகப்பெரிய புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளது.