தென் ஆஸ்திரேலிய அரசாங்கமானது உலகின் மிகப்பெரிய சூரிய வெப்ப ஆலையை மேம்படுத்துவத்துவதற்கான ஒப்புதலை அளித்துள்ளது.
பயன்பாட்டு அளவிலான சூரிய ஒளி ஆற்றல் நிறுவனமான சோலார் ரிசர்வ் (Solar Reserve) மூலம் கட்டப்படும் 150 மெகாவாட் அரோரா ஆலையின் மீதான கட்டுமானப் பணிகள் 509 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் 2018ஆம் ஆண்டு தொடங்கப்படும்.
இந்தப் புதிய கட்டுமானப் பகுதியானது தெற்கு ஆஸ்திரேலியாவின் கடைசி நிலக்கரி மின் நிலையத்தின் தளமான போர்ட் அகஸ்டாவுக்கு அருகே அமையவுள்ளது.
இது சூரிய வெப்ப தொழில்நுட்பத்தையும், உருகிய உப்பு கோபுரத்தையும் பயன்படுத்தி சூரிய ஆற்றலைக் கைப்பற்றி சேமிக்கின்றது.
இந்தப் புதிய ஆலையானது தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து குடியிருப்புக்களில், 35 சதவீதத்தினருக்கு மின் ஆற்றல் வழங்கும்.
இது அதிக மின் தேவையைக் கொண்ட கோடைக் காலத்தின் போது மாநில மின்சார விநியோகத்தின் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்காக டெஸ்லா என்ற நிறுவனத்தால் கட்டப்பட்ட மிகப்பெரிய லித்தியம் அயான் மின்கலத்துடன் (Li-ionBattery) சேர்ந்து தெற்கு ஆஸ்திரேலியாவின் மற்றொரு பெரிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டமாக இணைய உள்ளது.